ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

சனி - செவ்வாய் பரிகாரம்

சனி செவ்வாய்  பரிகாரம் 



1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவத்தலமானதும் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடப்பெற்றதும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதுமான கூந்தலூர் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் சுவாமி திருக்கோவில் நுழைவாயில் இடப்புறம் சனி பகவான் அதிபதியான வினாயகப்பெருமானும் வலப்புறம்  செவ்வாய் கிரக அதிபதியான முருகப்பெருமான் தேவமயிலுடன்  ஈசான்ய பாகத்தில்,  சனி பகவானுக்கு எதிரே ஈசான்ய பார்வையாக அமர்ந்து அருள் பாலிப்பது வேறு எந்த சிவாலயத்திலும் காணவியலா தனிச்சிறப்பு.

சனி-செவ்வாய் [ குஜன் - சனைச்சரன் ] கிரகங்கள் எதிர் எதிராக அமைந்துள்ளதால் இத்தலம் சனி-செவ்வாய் கிரக பாதிப்புகள் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

ஜாதகத்தில் சனி - செவ்வாய் பரிவர்த்தனை, சனி - செவ்வாய் ஒரே கட்டத்தில் சேர்ந்திருப்பது காரணமாக ஏற்படும் உடல்நலக்குறைவு, சொத்துக்கள் சம்பந்தமான தடைகள்,திருமணத்தடை,குழந்தை பாக்கியமின்மை போன்ற குறைகளுக்கும் பரிகார ஸ்தலமாக திகழ்கிறது.


செவ்வாய் கிரகம், கோச்சார ரீதியாக சனி பகவானின் ஆட்சி வீடான மகர இராசியில் சஞ்சரிக்கும் வேளையில், எதிர்வரும் 16-12-2014 அன்று சனி பகவான் செவ்வாய் கிரகத்திற்கு ஆட்சி வீடான விருச்சிகத்திற்கு துலாம் இராசியிலிருந்து [ சனி - செவ்வாய் பரிவர்த்தனையாக ]  பெயர்ச்சி அடைகிறார்.

மேலும், 22-11-2014 முதல் 31-12-2014 வரையிலும் மற்றும் 1-1-2015 முதல் 10-2-2015 வரை செவ்வாய் கிரகம் சனி கிரகத்தின் ஆட்சி  வீடான மகரம் மற்றும் கும்பத்தில் பரிவர்த்தனையாக பிரவேசிப்பதால் , இக்காலகட்டத்தில் சனி - செவ்வாய் கிரகங்களின் பாதிப்புகளிருந்து விடுபடவும், நற்பலன்கள் அடையவும் இத்தலத்தில் சனி - செவ்வாய் பரிகார பூஜை செய்து  நற்பலன்கள் பெற்றிடலாம்.

நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியினை முன்னிட்டு , 16-12-2014 அன்று இத்தலத்தில் சிறப்பு பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

மேலும், 10-12-2014 முதல் 20-12-2014 வரை சனிப்பெயர்ச்சி சிறப்பு  இலட்சார்ச்சனை நடைபெற இருக்கிறது.

சனி செவ்வாய் பரிகார ஸ்தலமான இத்தலத்தில் , மேற்கண்ட சிறப்பு ஹோமம் மற்றும் இலட்சார்ச்சனைகளில் கலந்துகொண்டு நற்பலன்கள் பெற்றிடலாம்.

மேலும், அவரவர் இராசி நட்சத்திரத்திற்கு உரித்தான விருட்சங்களை , பசுமை சூழ்ந்த இத்திருக்கோவில் தோட்டத்தில், பிரார்த்தித்து நட்டு வர, விருட்சம் தழைத்து வளர வளர, அவர்தம் கிரக பாதிப்புகள் நீங்கி நலமடையலாம்.