ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Wednesday, 31 December 2014

01-01-2015 வியாழன் திருக்கார்த்திகை நன்னாள்!அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஜம்புகாரணேசுவர சுவாமி திருக்கோவில்

திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

[கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில்.]01-01-2015 வியாழன்
திருக்கார்த்திகை நன்னாள்!,
அருள்தரும் குமரகுருபரன் என திருப்புகழில்
அருணகிரிநாதரால் போற்றப்படும்
கூந்தலூர் ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு,
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்!
அடியார்கள் வருக! எம்பெருமான் பேரருள் பெறுக!!

ஓம் சரவண பவ!
http://www.koonthalurmurugantemple.org

Wednesday, 17 December 2014

சனிபெயர்ச்சி விழா

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.
16-12-2014 
அன்​று நடைபெற்ற,


சனிப்பெயர்ச்சி தின சிறப்பு ஹோமம் , இலட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள்  இறையருளால்  வெகு சிறப்பாக அடியார்கள் புடைசூழ  வெகுவிமரிசையாக நடந்தேறியது! காலை 8 மணியளவில் ஹோமத்திற்கான கட புறப்பாடு   அருகில் உள்ள ஸ்ரீவிநாயகர் திருக்கோவிலில் இருந்து  முருகனடியார்கள் புடைசூழ புறப்பட்டு , மேளதாளம்  முழங்க, அடியார்களின் திருமுருக நாம கோஷகானத்துடன் கூந்தலூர் முருகன் திருக்கோவில் வந்தடைந்து, சனிபெயர்ச்சி விஷேஷ ஹோம  ஆராதனைகள் இனிதேஆரம்பமாயின.

அடியார் யாவரும் தம் குடும்ப நலம், உற்றார் உறவினர் மற்றும் மக்கள் நலம் பெறவேண்டி., தேடி வரும் அடியார்க்கெல்லாம் வேண்டியது வேண்டியபடி வாரிவழங்கும் கருணைக்கடல் , அடியார்ப்  பிணி நீக்கும் பிறவிஞானவள்ளல் , மனங்கசிந்துருகி கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அருள்ஞானக் குமரனாம்,  கூந்தலூரில் உறையும் எம்பெருமான் திருமுருகக்கடவுள் திரு அருள் நாடி , அவன் திருவுருவை வணங்கி, அவனடிதொழுது,   கிரக பாதிப்புகள் நீங்க, அவர்தம் பிரார்த்தனைகள் எல்லாம் நடத்தித்தர வணங்க வந்துகொண்டிருந்த அடியார் எல்லாம் மனமுருக குமரகுருபரனை தரிசித்து நன்னம்பிக்கையுடன் பரவசம் அடைந்தனர்.

பெருந்திரளான அடியார் யாவரும் ஹோம வேள்வியில் , இலட்சார்ச்சனைகளில் கலந்துகொண்டனர். மதியம் வந்திருந்த அடியார்க்கெல்லாம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மதியம் 2 மணியளவில், ஹோம கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க, அடியார் புடைசூழ திருக்கோவில் பிரகாரம் வலம் வந்தபின், திருமுருகனுக்கும் சனீச்வர பகவானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து 2.43 மணிக்கு கூந்தலூர்  திருமுருகனுக்கும் சனீச்வர பகவானுக்கும் மேளதாளங்கள்  முழங்க , அடியார்களின் பக்தி முழக்கங்களுடன் நடைபெற்ற மஹா தீபாராதனைக் காட்சியில் , அடியார் யாவரும்   பேரின்பப்  பரவசம் அடைந்தனர். 

பின்னர் அடியார் அனைவரும் பக்திப்பரவசத்துடன்  முருகனையும், சநீச்வரபகவானையும் தரிசித்து வழிபட்டனர்.

மாலை 6 மணிக்கு திருக்கோவிலில், குடந்தை G.காசிநாதன் குழுவினரின் வயலின் இன்னிசை நிகழ்ச்சி அடியாரெல்லாம் இரசித்து மகிழும்வண்ணம் வெகு சிறப்பாக நடந்தேறியது! திரளான அடியார்களின் பங்கேற்பால் நிகழ்ச்சி இரவு 9.30 மணி வரை நீடித்தது. 

விழா சிறக்க உறுதுணை புரிந்த முருகனடியார் அனைவருக்கும் விழாக் குழுனரின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், முருகனைத்தரிசிக்க வந்திருந்த  அடியார் எல்லார்க்கும் முருகனருள் புரிய எமையாளும் கூந்தலூர் முருகன் திருப்பதம் பணிகிறோம்!

நேரில் வர விருப்பம் இருந்தாலும் அவரவர் வாழ்வியல் சூழலால் நேரில் வரவியலா அன்பர்கள், வழிபாட்டில் கலந்துகொள்ள விருப்பம் கொண்டு மொபைல் மூலமாகவும், இமெயில் மூலமாகவும் விவரம் தெரிவித்திருந்த அன்பர்களுக்கு, திருக்கோவில் முருகன் ஹோம இலட்சார்ச்சனை அருட்பிரசாதங்கள் தபால் மூலம் இன்று முதல் அனுப்பப்படுகின்றன.

விரைவில் நேரில் வந்து முருகனை தரிசனம் செய்கிறோம், விழாவினை சிறப்பாக நடத்துங்கள்  என விழா சிறக்க வாழ்த்து சொன்ன அத்தனை நல்லன்பர்கள் யாவருக்கும் திருக்கோவில் விழாக்குழுவினரின் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

முருனருள் யாவருக்கும் கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறோம்!

வருக தரிசனம் செய்க! முருகன் அருள் பெருக!

கூந்தலூர் முருகனுக்கு அரோகரா! 

ஓம் சரவண பவ!

Thursday, 11 December 2014

கூந்தலூர் சிவாலயம்


கூந்தலூர் சிவாலயம் - முருகன் கோவில் !

திருக்கோவில் சிறப்புகள்:

1600 ஆண்டுகால பழம்பெருமை மிக்க சிவாலயம்! 
சீதாதேவி இராமருடன் வழிபட்ட சிவத்தலம்! 
நரி வழிபாட்டு சாபவிமோசனம் பெற்ற திருத்தலம்! 
உரோமரிஷி சித்தர் தவமிருந்து வழிபட்ட சிவத்தலம்! 
அப்பர் சுந்தரர் பாடல் பெற்ற வைப்புத்தலம்! 
அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட திருமுருகத்தலம்! 
ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும் திருமுருகத்தலம்! 
திருமுருகனை வணங்கி நிற்கும் சனீச்வர பகவான் தலம்! 
சனி செவ்வாய் பரிகாரத்தலம்!
சகல கிரக பரிகாரத்தலம்! 
ஓம் சரவணபவ!

திருக்கோவில் வரும் வழி:
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி,பூந்தோட்டம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூந்தலூர் வழியே செல்லும்.

      இணையதளம் : http://www.koonthalurmurugantemple.org
     ப்ளாக் தளம்     : http://koonthalurmurugantemple.blogspot.in
ப்ளாக் ஆங்கிலம்   : http://murugantemplekoonthalur.blogspot.in/

  க்ளிக் செய்யவும். ---> * * * கூகிள் மேப் * * * <---க்ளிக் செய்யவும்.

Saturday, 22 November 2014

Saneeswarar Pravesam

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

சனிப்பிரவேசம்!  

  
நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் நாளான 16-12-2014 அன்று மதியம் 2.43 மணிக்கு, அருள்மிகு சனீஸ்வர பகவான் துலாம் இராசியிலிருந்து விருச்சிக இராசிக்கு பிரவேசிக்க இருப்பதை முன்னிட்டு , திருக்கூந்தலூர் முருகன் கோவிலில் சனீஸ்வர  பகவானுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

1600 ஆண்டு பழம்பெருமை வாய்ந்த கூந்தலூர் முருகன் திருத்தலம் , சர்வ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. அதிசிறப்பாக ,திருக்கோவிலின் ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும்  திருமுருகப் பெருமானை வணங்கி நிற்கும் சாந்த ரூபியாக , அருள் தரும் வள்ளல் பெருமானாக சனீஸ்வர பகவான் திகழ்வதால், சர்வ சனீஸ்வர பாதிப்புகள் நீங்கி சனீஸ்வர பகவானின் கருணையை, அன்பை அடையும் மிகச்சிறப்புக்குரிய பரிகாரத்தலமாக அடியார்களால் போற்றப்படுகிறது

மேலும், அங்காரக [ செவ்வாய் ] கிரகத்தின் ஆட்சி வீடான விருச்சிக இராசிக்கு இந்த சனி பகவான் பிரவேசம், செவ்வாய் - சனி பரிவர்த்தனை என்ற ஜாதக ரீதியான அமைப்பில் நிகழ்வதால்,அருணகிரிநாதரால் குமரகுருபரன் என வழங்கப்படும் கூந்தலூர் திருமுருகன் திருவருளால், இயல்பிலே செவ்வாய் - சனி பரிவர்த்தனை நிவாரண ஸ்தலமாகத் திகழும் கூந்தலூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு அன்பர்கள் வந்திருந்து, 

சனிப்பிரவேச சிறப்பு ஹோமத்திலும் , பரிஹார அபிஷேக அர்ச்சனை ஆராதனைகளிலும் பங்கேற்று , அவர்தம் குடும்ப சுபிட்ஷம், தேக ஆரோக்கியம், மன அமைதி , பொருளாதார உயர்வுநிலைபெற நற்பலன் பெற்று , கிரக பாதிப்புகள் நீங்கி நிவாரணமடைந்து நல்வாழ்வு பெற்றிட, 

 எல்லாம் வல்ல கருணைக்கடலாம் அடியார் பிணி நீக்கும் 
அருள்மிகு கூந்தலூர் திருமுருகக்கடவுள் 
தாள்பணிந்து வணங்குகிறோம்!

ஓம் சரவண பவ!


க.ஆசைத்தம்பி  -  தக்கார்/செயல் அலுவலர் -  94435 12146

 தே.திருநாவுக்கரசு -  செயல் அலுவலர் -  95856 67502

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.
மொபைல்: 96886 77538 / 94435 24737

Tuesday, 18 November 2014

கூந்தலூர்

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

நேரில் வருவோர்

முன் பதிவிற்கும் , 
பரிகார ஹோமத்திற்கும் 

தொடர்பு கொள்ள;

 மொபைல் எண்: 96886 77538 / 94435 24737

http://koonthalurmurugantemple.blogspot.in

அனைவரும் வருக! சிவனருள் பெறுக!! 

Sunday, 16 November 2014

கார்த்திகை முதல் சோம வார சங்காபிஷேகம்!

17-11-2014

இன்று 

கார்த்திகை முதல் சோம வார சங்காபிஷேகம்!

 கார்த்திகை மாத முதல் நாள், சோம வாரத்தில், திங்கட்கிழமையில்  பிறக்கிறது.

சிவாலயங்களில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் உலகாளும் ஈசனுக்கு , சிவபெருமானுக்கு விஷேசமாக 108,1008 எண்ணிக்கைகளிலான  வெண் சங்குகளால் , சங்காபிஷேகம் சிறப்புற நடைபெறும்.

சிவனடியார்  மனமுருக சிவபெருமானை பூசித்து வணங்கும் நன்னாளாம் இன்று , கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷகம் , திருக்கூந்தலூர் அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரருக்கு மாலை 4.30 மணியளவில் சிறப்புற நடைபெறும்.

அடியார்கள் வருக! சிவபெருமான் பேரருள் பெறுக!


Koonthalur Murugan


Sunday, 9 November 2014

முருகன் கோவில், கூந்தலூர்.
இயற்கை எழில் சூழலில் 
அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், முருகன் கோவில், கூந்தலூர்.

       நவக்ரஹ தரிசனம் செல்ல எண்ணம் கொண்ட அடியார்கள்,அன்பர்கள் கும்பகோணத்திலிருந்து திருக்கூந்தலூர் வழித்தடம் வழியே பயணத்திட்டம் வகுத்துக்கொண்டால்,குடந்தை நகரைச்சுற்றியுள்ள திருக்கோவில்களில் தரிசனம் முடித்துவிட்டு திருக்கூந்தலூரில் இரவு தங்கிவிட்டு மறுநாள் , திருநள்ளார் சநீச்வர பகவான் திருக்கோவில் செல்லும் வழியில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மனை தரிசித்து வணங்கிவிட்டு, மயிலாடுதுறை வழியே பிற கிரக தலங்களையும் வழிபட்டு கும்பகோணத்திலிருந்து இரயில் அல்லது வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்பலாம்.

   கூந்தலூரில் தங்கும் போது தங்குமிடம்,உணவு செலவு வெகுவாக குறையும் மேலும், நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச் சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெறலாம்.

  அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய ஜம்புகாரணேசுவரர் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அடியார்க்கெல்லாம் அருள் பாலித்துவரும் எம்பெருமான் கூந்தலூர் முருகனை தரிசித்து, இறையனுபவம் பெற வாரீர்!

எமது திருக்கோவில் இணையதளங்கள் 


நேரில் வருவோர்

முன் பதிவிற்கும் , 

பரிகார ஹோமத்திற்கும் 

தொடர்பு கொள்ள;

 மொபைல் எண்: 96886 77538 / 9443524737

தங்களை  கூந்தலூர் முருகன் ஆலயத்திற்கு, அன்புடன் அழைக்கிறோம்!!
குமரகுருபரன் அருள் பெற்றுய்ய குடும்பத்துடன் வாருங்கள்! 


ஓம் சரவணபவ! 

Thursday, 6 November 2014

அன்னாபிஷேகம்


                                                            அன்னாபிஷேகம்:        
                                                                      06-11-2014. சிவாலயங்களில்,சிவபெருமானுக்கு ஆண்டு முழுவதும் எப்போதும்  இளநீர்,தேன்,பால், தயிர்,  பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் , நடந்தாலும்,ஆண்டுக்கு ஒருமுறை , ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் மட்டுமே , அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்ன அலங்காரத்தில் சிவபெருமானை வழிபட, கோடி சிவ தரிசனம் பெற்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் வழிபாட்டின் பலன்கள் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கச்செய்யவே, அன்னப்பிரசாதத்தை  கோவில் திருக்குளங்களிலும், ஆறுகளிலும் கரைப்பர்.

 இத்தகைய விசேஷ திருநாளாம் ஐப்பசி பவுர்ணமி நன்னாளில்  இன்று மாலை ,கூந்தலூர் அருள்மிகு  ஆனந்தவல்லி உடனாய  ஜம்புகாரணேசுவரர்  திருக்கோவிலில்  , அருள்மிகு ஜம்புகாரணேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்பர்கள் கலந்துகொண்டு, சிவனருள் பெறுக!

Monday, 3 November 2014

கூந்தலூர் முருகன்

அருள்மிகு  ஆனந்தவல்லி உடனாய  ஜம்புகாரணேசுவரர்  திருக்கோவிலில்     தனி  சன்னதி கொண்டு  அடியார்க்கெல்லாம்  அருள்   பாலித்துவரும்   எம்பெருமான்  கூந்தலூர் முருகனை தரிசித்து , இறையனுபவம் பெற வாரீர்!

நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச்  சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெற வாரீர்! ஓம் சரவணபவ! 


இணையதளம்:

Thursday, 30 October 2014

கூந்தலூர் திருமுருகன் திருக்கல்யாணம்!


நேற்றைய தினம் கந்த ஷஷ்டி திருவிழா சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் இனிதே நிறைவுற்றது.

இன்று, கூந்தலூர் திருமுருகன் திருக்கல்யாணம்!

சிறப்பு ஆபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் இன்னிசை முழங்க அடியார் யாவரும் கண்டு இன்புற திருகல்யாண வைபோகமும் மாலையில் சிறப்பு அலங்கார அர்ச்சனை ஆராதனைகள் நடைபெற உள்ளது!

அடியார் யாவரும் திருக்கல்யாண கோல அலங்கார கூந்தலூர் திருமுருகன் அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்!

ஓம் சரவணபவ!     கூந்தலூர் திருமுருகன் திருவடி சரணம்!

Tuesday, 28 October 2014

கந்த ஷஷ்டி விழா!கந்த ஷஷ்டி விழா!


கூந்தலூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த ஷஷ்டி விழா!

29-10-2014 
இன்று கந்த ஷஷ்டி விழாவை முன்னிட்டு,  
திரு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


அனைவரும் வருக!

திருமுருகன் அருள் பெறுக!!

Monday, 20 October 2014

கூந்தலூர்

பக்தர்கள் அன்பர்கள் அனைவருக்கும் இனிய 

தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


 திருக்கூந்தலூர் திருமுருகன் திருவடி போற்றி!

அன்பர் அனைவருக்கும் இனிய மாலைப்பொழுது , நற்பொழுதாக அமைய நல்வாழ்த்துக்கள்!

Friday, 10 October 2014

Sani Sevvaai Parikaram

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில்

[ முருகன் ஸ்தலம் ]


கூந்தலூர் முருகன் கோவில் 


சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்

Friday, 3 October 2014

கந்த ஷஷ்டி விழா!கந்த ஷஷ்டி விழா!


கூந்தலூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த ஷஷ்டி விழா 23-10-2014 அன்று ஆரம்பித்து 29-10-2014 அன்று நிறைவடைகிறது.

கந்த ஷஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

Monday, 15 September 2014

சனி - செவ்வாய் - ஒரே பரிகார ஸ்தலம்

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்  திருக்கோயில்
  [ முருகன் ஸ்தலம் ]


கூந்தலூர் முருகன் ஸ்தலம் 


சனி - செவ்வாய்  -  பரிகார ஸ்தலம் 


Friday, 12 September 2014

கூந்தலூர் முருகன் ஆலயம்

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்  திருக்கோயில்
  [ முருகன் ஸ்தலம் ]


கூந்தலூர் முருகன் ஸ்தலம் 


சனி - செவ்வாய்  - ஒரே பரிகார ஸ்தலம் 


திண்டீச்சரங் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞசிற்றேமம் சேறை  
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு 
அண்டர் தொழும் அதிரை வீரட்டானம் ஐயாறு சோகந்தி ஆமாத்தூருங் 
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காணலாமே.
                                                                                                                                                                 அப்பர் - 6 - 70 - 9

1600  ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த இச்சிவத்தலம், திருநாவுக்கரசரால்

தேவாரப்பாடல் பெற்றதும் அருணகிரி நாதரால் திருப்புகழும் பாடப்பெற்ற விஷேச தலமாகும். குடந்தை - நாச்சியார்கோயில் - பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது, கூந்தலூர்.

தொடர்புக்கு : 96886 77538 / 94435 24737