ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Sunday 9 November 2014

முருகன் கோவில், கூந்தலூர்.




இயற்கை எழில் சூழலில் 
அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், முருகன் கோவில், கூந்தலூர்.

       நவக்ரஹ தரிசனம் செல்ல எண்ணம் கொண்ட அடியார்கள்,அன்பர்கள் கும்பகோணத்திலிருந்து திருக்கூந்தலூர் வழித்தடம் வழியே பயணத்திட்டம் வகுத்துக்கொண்டால்,குடந்தை நகரைச்சுற்றியுள்ள திருக்கோவில்களில் தரிசனம் முடித்துவிட்டு திருக்கூந்தலூரில் இரவு தங்கிவிட்டு மறுநாள் , திருநள்ளார் சநீச்வர பகவான் திருக்கோவில் செல்லும் வழியில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மனை தரிசித்து வணங்கிவிட்டு, மயிலாடுதுறை வழியே பிற கிரக தலங்களையும் வழிபட்டு கும்பகோணத்திலிருந்து இரயில் அல்லது வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்பலாம்.

   கூந்தலூரில் தங்கும் போது தங்குமிடம்,உணவு செலவு வெகுவாக குறையும் மேலும், நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச் சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெறலாம்.

  அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய ஜம்புகாரணேசுவரர் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அடியார்க்கெல்லாம் அருள் பாலித்துவரும் எம்பெருமான் கூந்தலூர் முருகனை தரிசித்து, இறையனுபவம் பெற வாரீர்!

எமது திருக்கோவில் இணையதளங்கள் 


நேரில் வருவோர்

முன் பதிவிற்கும் , 

பரிகார ஹோமத்திற்கும் 

தொடர்பு கொள்ள;

 மொபைல் எண்: 96886 77538 / 9443524737

தங்களை  கூந்தலூர் முருகன் ஆலயத்திற்கு, அன்புடன் அழைக்கிறோம்!!
குமரகுருபரன் அருள் பெற்றுய்ய குடும்பத்துடன் வாருங்கள்! 


ஓம் சரவணபவ!