அன்னாபிஷேகம்:
06-11-2014.
சிவாலயங்களில்,சிவபெருமானுக்கு ஆண்டு முழுவதும் எப்போதும் இளநீர்,தேன்,பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் , நடந்தாலும்,ஆண்டுக்கு ஒருமுறை , ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் மட்டுமே , அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்ன அலங்காரத்தில் சிவபெருமானை வழிபட, கோடி சிவ தரிசனம் பெற்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் வழிபாட்டின் பலன்கள் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கச்செய்யவே, அன்னப்பிரசாதத்தை கோவில் திருக்குளங்களிலும், ஆறுகளிலும் கரைப்பர்.
இத்தகைய விசேஷ திருநாளாம் ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் இன்று மாலை ,கூந்தலூர் அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய ஜம்புகாரணேசுவரர் திருக்கோவிலில் , அருள்மிகு ஜம்புகாரணேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்பர்கள் கலந்துகொண்டு, சிவனருள் பெறுக!