ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Saturday, 22 November 2014

Saneeswarar Pravesam

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

சனிப்பிரவேசம்!  

  
நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் நாளான 16-12-2014 அன்று மதியம் 2.43 மணிக்கு, அருள்மிகு சனீஸ்வர பகவான் துலாம் இராசியிலிருந்து விருச்சிக இராசிக்கு பிரவேசிக்க இருப்பதை முன்னிட்டு , திருக்கூந்தலூர் முருகன் கோவிலில் சனீஸ்வர  பகவானுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

1600 ஆண்டு பழம்பெருமை வாய்ந்த கூந்தலூர் முருகன் திருத்தலம் , சர்வ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. அதிசிறப்பாக ,திருக்கோவிலின் ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும்  திருமுருகப் பெருமானை வணங்கி நிற்கும் சாந்த ரூபியாக , அருள் தரும் வள்ளல் பெருமானாக சனீஸ்வர பகவான் திகழ்வதால், சர்வ சனீஸ்வர பாதிப்புகள் நீங்கி சனீஸ்வர பகவானின் கருணையை, அன்பை அடையும் மிகச்சிறப்புக்குரிய பரிகாரத்தலமாக அடியார்களால் போற்றப்படுகிறது

மேலும், அங்காரக [ செவ்வாய் ] கிரகத்தின் ஆட்சி வீடான விருச்சிக இராசிக்கு இந்த சனி பகவான் பிரவேசம், செவ்வாய் - சனி பரிவர்த்தனை என்ற ஜாதக ரீதியான அமைப்பில் நிகழ்வதால்,அருணகிரிநாதரால் குமரகுருபரன் என வழங்கப்படும் கூந்தலூர் திருமுருகன் திருவருளால், இயல்பிலே செவ்வாய் - சனி பரிவர்த்தனை நிவாரண ஸ்தலமாகத் திகழும் கூந்தலூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு அன்பர்கள் வந்திருந்து, 

சனிப்பிரவேச சிறப்பு ஹோமத்திலும் , பரிஹார அபிஷேக அர்ச்சனை ஆராதனைகளிலும் பங்கேற்று , அவர்தம் குடும்ப சுபிட்ஷம், தேக ஆரோக்கியம், மன அமைதி , பொருளாதார உயர்வுநிலைபெற நற்பலன் பெற்று , கிரக பாதிப்புகள் நீங்கி நிவாரணமடைந்து நல்வாழ்வு பெற்றிட, 

 எல்லாம் வல்ல கருணைக்கடலாம் அடியார் பிணி நீக்கும் 
அருள்மிகு கூந்தலூர் திருமுருகக்கடவுள் 
தாள்பணிந்து வணங்குகிறோம்!

ஓம் சரவண பவ!


க.ஆசைத்தம்பி  -  தக்கார்/செயல் அலுவலர் -  94435 12146

 தே.திருநாவுக்கரசு -  செயல் அலுவலர் -  95856 67502

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.
மொபைல்: 96886 77538 / 94435 24737